Wednesday, October 30, 2013
ரொறன்ரோ::தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் துணைவிக்கு கனடா புகலிடம் வழங்கியுள்ளது.
பரராஜசிங்கத்தின் துணைவி சுகுனநாயகி புலிகள் அமைப்பில் அங்கம் வகித்ததாகவும், அவரது கணவர் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாகவும் முன்னர் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
2005ம் ஆண்டு நத்தார் பண்டிகை ஆராதணைகளின் போது தேவாலயத்தில் வைத்து பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர்
திருமதி பரராஜசிங்கம் கனடாவில் தற்காலிக அடிப்படையில் அடைக்கலம் பெற்றுக்கொண்டார்.
அவரது மகனும் மகளும் கனேடிய பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய காரணத்தினால் திருமதி பரராஜசிங்கத்திற்கு புகலிடம் வழங்க முடியாது எனவும் நாடு கடத்த வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், 76 வயதான திருமதி பரராஜசிங்கம் ஆபத்தானோர் பட்டியலில் தொடர்ந்தும் இணைக்கப்பட முடியாது என கனேடிய நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எவ்வாறெனினும், திருமதி பரராஜசிங்கத்தை நாடு கடத்தக் கூடாது என நீதிமன்றம் திடமான உத்தரவுகள் எதனையும் பிறப்பிக்கவில்லை.
பயங்கரவாதிகள், பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணுவோர் தொடர்பிலான வரைவிலக்கம் பற்றி நீதிமன்றம், குடிவரவுத் திணைக்களத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த தெளிவுபடுத்தல்களின் அடிப்படையில் பெரும்பாலும் திருமதி பரராஜசிங்கம் நாடு கடத்தப்பட மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது,
No comments:
Post a Comment