Sunday, September 29, 2013

வட மாகாண ஆளுநரை அகற்றுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விடுக்கும் கோரிக்கை அரசியலமைப்பிற்கு முரணானதாகும்: சட்டமேதைகளான விக்னேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்கும் போதிய அறிவில்லை: உதய கம்மன்பில!

Sunday, September 29, 2013
இலங்கை::வட மாகாண ஆளுநரை அகற்றுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விடுக்கும் கோரிக்கை அரசியலமைப்பிற்கு முரணானதா கும். இக்கூற்றை கண்டிப்பதாக மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
 
வட மாகாணத்திற்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். மறுபுறம் சட்டத் துறை சார்ந்த சுமந்திரன் போன்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகவுள்ளார். அவர்களுக்கு இந்த சட்டம் தொடர்பாக போதிய அறிவின்மை காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
மாகாண சபைக்கு ஜனாதிபதியிடம் குறித்த ஆளுநரை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்க முடியும். அவ்வாறு கோரிக்கை விடுப்பதற்கு 3 காரணங்கள் உண்டு. 154 ஆ. 2 ஆம் சரத்தின் கீழ் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
முதலாவது விடயம் யாப்பை வேண்டுமென்றே மீறுவது இரண்டாவது விடயம் இலஞ்ச ஊழலில் தொடர்புபட்டிருப்பது.மூன்றாவது விடயம் தமது அதிகாரத்தை பிழையாக பயன்படுத்துவது
 
எமது ஆளுநர் இராணுவ அதிகாரி அவரோடு செயல்பட முடியாதென்ற அடிப் படையில் செயல்படுவதாகவிருந்தால் இது அரசியலமைப்பை மதிக்காமல் செயல்படும் ஒரு செயல்பாடாகும். இது வட மாகாண சபை அல்ல தமிழ் ஈழம்  என்ற அடிப்படையில் செயல்படுவதையே  விக்னேஸ்வரன் உணர்த்துகின்றார்.

No comments:

Post a Comment