Sunday, September 29, 2013

வடக்கு மாகாணசபை முதலமைச்சர் மற்றும் சபை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது!


Sunday, September 29, 2013
இலங்கை::வடக்கு மாகாணசபை முதலமைச்சர் மற்றும் சபை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,  கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்:-

அமெரிக்காவில் இருந்து திரும்பும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு யாழ்ப்பாணத்தில் வைத்தே ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடு திரும்பியவுடன், பதவிப்பிரமாணம் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆளுநர் தெரியப்படுத்துவார்.

இதேவேளையில், பதவிப் பிரமாண ஏற்பாடுகள் தொடர்பில் வடமாகாண ஆளுநர், முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment