Monday, September 2, 2013

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால் ஒலுவில் துறைமுக திறப்பு விழா!:-வாகரை புதிய பனிச்சங்கேணிப் பாலம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு!

Monday, September 02, 2013
இலங்கை::மறைந்த மாமனிதர்- முன்னாள் கப்பல்துறை, துறைமுகங்கள் அமைச்சர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் சிந்தனையில் உதித்த ஒலுவில் துறைமுகம் மஹிந்த சிந்தனையின் கீழ் நவீன முறையில் மீன்பிடி மற்றும் வர்த்தகத் துறைமுகமாக நிர்மானிக்கப்பட்டு அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால் நேற்று (01.09.2013) பிற்பகல் 3.30மணிக்கு திறந்து வைக்கப்பட்டு- மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் துறைமுகம் திறப்பு விழாக் குழுத்; தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோஹித்த அபே குணவர்த்தன, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், சிரேஸ்ட அமைச்சர் பி.தயாரத்ன, கிழக்கு மாகாண ஆளுனர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீட், மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெவ்வை, திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான பைஸல் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ். பி.பியசேன, மாகாண சபை உறுப்பினர்களான எம்.எம்.ஜெமீல், ஏ.எல்.நசீர், அம்பாரை அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ், அக்கரைப்பற்று மாநகர மேயர் ஏ.அஹமட் ஸக்கி, இலங்கை துறைமுகங்கள் அதிகார சபைத் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது துறைமுகத்தை ஜனாதிபதி அவர்கள் நாடாவை வெட்டி திறந்து வைப்பதையும் ஐஸ் தொழிற்சாலையின் செயற்பாட்டை ஆரம்பித்து வைத்த பின் நினைவுப் படிவத்தினைத் திரைநீக்கம் செய்து வைப்பதையும் படங்களில் காணலாம்.
அத்துடன் ஒலுவிலில் துறைமுகமொன்றை அமைத்துக் கொடுத்ததற்காக தென்கிழக்கு முஸ்லிம் மக்களின் சார்பில் நன்றி தெரிவித்து அமைச்சர் அதாஉல்லா ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் வழங்குவதையும் கலந்து கொண்ட அமைச்சுக்கள் மற்றும் அமைச்சர்களின்; செயலாளர்கள் திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள்,துறைமுக அதிகார சபை உத்தியோகத்தர்கள், மக்கள் பிரதிநிதிகள், பிரமுகர்கள், மீனவ சமுகத் தலைவர்கள், பொது மக்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

வாகரை புதிய பனிச்சங்கேணிப் பாலம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு!



Monday, September 02, 2013
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட இலங்கை ஜனநாய சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு-திருக்கொண்டியாமடு –திருகோனமலை வீதியில் மஹிந்த சிந்தனை துரித கதி வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தின் முழு பங்களிப்பு மற்றும் உள்நாட்டு முதலீட்டில் 1060 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வாகரை புதிய பனிச்சங்கேணிப் பாலத்தை நேற்று (01.09.2013) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

வீரம் மிகு தலைமைத்துவத்தின் கீழ் பெருமைமிக்க தாயகம் அடுத்த தசாப்தத்தின் முன்னேற்றத்தை நோக்கி எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற இம் மாபெரும்; நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல ,ஜப்பான் நாட்டு தூதுவர் நொபுஹித்தோ ஹோபோ,இலங்கை பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்க கோன்,இலங்கை மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால்,உற்பத்தி திறன் திறன் அபிவிருத்தி அமைச்சர் பஷீர் சேகுதாவூத்,கிழக்கு மாகாண அளுனர் மொஹான் விஜயவிக்ரம,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்,திணைக்கள தலைவர்கள்,இரானுவ பொலிஸ் உயரதிகாரிகள் ,உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் ,மதப் பெரியார்கள் ,வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதநிதிகள் ,பெரும் திரளான பொது மக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இந்த பாலம் அமைக்கப்பட்;டதன் மூலம் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு மிகவும் குறுகிய நேரத்தில் பயனங்களை மேற்கொள்ள முடியும்.

கடந்த காலங்களில் இப்பிரதேசம்  புலிகளின் கட்டுபாட்டில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment