Sunday, September 29, 2013

தமிழகத்தில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையகத்திற்கு முன்னால் தமிழகத்தில் உள்ள இலங்கையர்கள் அகதி அந்தஸ்த்து கோரி ஆர்ப்பாட்டம்!

Sunday, September 29, 2013
சென்னை::தமிழகத்தில் உள்ள இலங்கையர்கள் தங்களுக்கு ஐக்கிய நாடுகளின் அகதி அந்தஸ்த்து கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று நடத்தியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையகத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசாங்கத்தின் நிவாரணங்களை பெற்றுக் கொள்வதற்கு அகதி அந்தஸ்த்து முக்கியமானதாக காணப்படுகிறது.

எனினும் தமிழகத்தில் உள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகளுள் பலருக்கு இந்த அந்தஸ்த்து இல்லாத நிலையில், அரசாங்கத்திடம் இருந்து உதவிகளை பெற முடியாதிருப்பதாக அகதிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment