Sunday, September 29, 2013
இலங்கை::இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 41 பேரும் இந்திய கரையோர பாதுகாப்பு படையினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மன்னாருக்கு அப்பாலுள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த மீனவர்கள் கடற் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மீனவர்களை விடுதலை செய்யுமாறு மன்னார் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இதேவேளை, திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 31 பேரின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்த நாகபட்டிணம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 65 மீனவர்கள் கடந்த ஜுலை மாதம் 30 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் 34 பேர் இம்மாதம் நான்காம் திகதி விடுதலை செய்யப்பட்டதுடன் எஞ்சிய 31 பேரும் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நேற்று மீண்டும் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 31 இந்திய மீனவர்களையும் ஒக்டோபர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:
Post a Comment