Sunday, September 29, 2013

சகல மாகாண சபைகளின் முதலமைச்சர்களும் இராணுவத்தை விலகிக் கொள்ள வேண்டும் என்று கோரினால் இராணுவத்தை கடலில் தள்ளுவதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம்: இராவணா பலய கேள்வி!

Sunday, September 29, 2013
இலங்கை::சகல மாகாண சபைகளின் முதலமைச்சர்களும் இராணுவத்தை விலகிக் கொள்ள வேண்டும் என்று கோரினால் இராணுவத்தை கடலில் தள்ளுவதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம்: இராவணா பலய கேள்வி!
 
வடக்கில் இராணுவம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள தனி நபர் அல்லது காணி உறுதிப்பத்திரங்கள் இருக்கும் இடங்களில் இருந்து முகாம்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
அவ்வாறு அப்புறப்படுத்தப்படும் இராணுவ முகாம்கள் வடக்கில் உள்ள அரசுக்கு சொந்தமான காணிகளில் மீள அமைக்கப்பட வேண்டும்.
வடக்கில் இராணுவ மு
காம்கள் இருப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
 
இதனடிப்படையில் பார்க்கும் போது சகல மாகாண சபைகளின் முதலமைச்சர்களும் இராணுவத்தை விலகிக் கொள்ள வேண்டும் என்று கோரினால் இராணுவத்தை கடலில் தள்ளுவதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேள்வி எழுப்புவதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment