Sunday, September 1, 2013

மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாதவாறு தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்!

Sunday, September 01, 2013
இலங்கை::மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாதவாறு தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசியல் கட்சிகளை தெளிவுபடுத்த தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 
இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே அரசியல் கட்சி செயலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க கூறியுள்ளார்.
 
மாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகளால் பல்வேறு பகுதிகளில் மக்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியமை தொடர்பில் தேர்தல்கள் செயலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
 
இந்த நிலையில் எதிர்காலத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் செயலகம் அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது

No comments:

Post a Comment