Sunday, September 1, 2013

சிரியா இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியது என்பது அபத்தமானது: ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின்!

Sunday, September 01, 2013
விளாடிவோஸ்டாக்::சிரியாவில் அதிபர் ஆசாத் படை இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி பொதுமக்கள் 1400 பேரை கொன்றது என்று ஐ.நா. ஆய்வாளர்கள் உறுதியாக கூறியுள்ளனர். இதனையடுத்து அமெரிக்கா, சிரியாவின் மீது போர் தொடுக்க செனட்
சபையின் ஒப்புதலுக்காக அதிபர் ஒபாமா காத்திருக்கிறார். இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின் கூறியதாவது:-

சிரியா இரசாயன ஆயுதங்களை வைத்திருக்கிறது, அதை பொதுமக்கள் மீது பயன்படுத்தியிருக்கிறது என்பதற்கு அமெரிக்கா ஆதாரங்கள் வைத்திருந்தால் அதை ஐ.நா. ஆய்வாளர்களிடமு, ஐ.நா. பாதுகாப்பு சபையிடமும் சமர்பிக்க வேண்டும்.

என்னை பொருத்தவரை, சிரியா பிரச்சினையில் மற்ற நாடுகளை உட்படுத்த நினைப்பவர்களின் எரிச்சலேயன்றி இது வேறொன்றுமில்லை. இதன்மூலம் உலகில் சக்திவாய்ந்த நாடுகளின் ஆதரவை பெறுவது யார் என்பதை காட்டுவதுமுமே ஆகும். 

சிரியா பொதுமக்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி நோபல் பரிசு பெறுவோரின் பட்டியலில் ஒபாமாவும் இடம்பெறவேண்டும். அடுத்த வாரம் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் சிரியா பிரச்சினை குறித்து விவாதிப்பதே நல்லது.

எனவே சிரியா மீது ஒபாமா, தாக்குதல் நடத்தக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
சிரியாவிடம் இராசயன ஆயுதங்கள் இருப்பது என்பது முற்றிலும் அபத்தமானது.

இவ்வாறு புதின் கூறினார்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment