Monday, September 2, 2013

கச்சத்தீவு பிரச்சினை: மத்திய அரசுக்கு (23ம் புலிகேசி) கருணாநிதி கண்டனம்!

Monday, September 02, 2013
சென்னை::கச்சத்தீவு பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அரசு தவராறான தகவல்களை பிரமாண வாக்கு பத்திரத்தின் மூலம் கூறியுள்ளது என தி.மு.க. தலைவர் (23ம் புலிகேசி)கருணாநிதி மத்திய காங்கிரஸ் அரசு மீது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
கச்சத்தீவு பற்றிய வழக்கில் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் கச்சத்தீவு எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கச்சத்தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினை இந்தியா, இலங்கை இடையே நீடித்து வந்தது. அதைத்தொடர்ந்து இந்திய- இலங்கைக் கடல் பகுதியில் சர்வதேச எல்லைக்கோட்டை நிர்ணயித்தபோது கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் சென்றுவிட்டது.
அதன் பிறகு 1974-ம் ஆண்டில் இந்தியா இலங்கை இடையே கச்சத் தீவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 1976-ம்ஆண்டில் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும் கச்சத்தீவு இலங்கையின் பகுதியில் இருப்பதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. 
 
கச்சத்தீவு இந்தியாவிற்குத்தான் சொந்தம் என்றும், அதனை 1974-ம் ஆண்டு இந்திய அரசு இலங்கைக்கு ஒரு ஒப்பந்தத்தின் வாயிலாக தாரை வார்த்துவிட்டது என்றும், அந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறாத காரணத்தால், அது செல்லாது என்றும் தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார்.
இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக்கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 368-வது பிரிவின்படி நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு வைத்து சட்டம் இயற்றப்பட வேண்டும். கச்சத்தீவைப் பொறுத்தவரை அப்படி எந்த வொரு சட்டமும் இதுவரை நிறைவேற்றப்படாததால், கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக்கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது என்பதுதான் உண்மை.
 
மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ள பிரமாணத்தில் உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் டெல்லிக்குவந்த இலங்கை அமைச்சர் பெரீஸ், கச்சத்தீவு முடிந்து போன அத்தியாயம் என்று வரம்பு கடந்து பேசியதற்கு மத்திய அரசு பின்பாட்டு பாடுவதைப்போல, இந்தப் பிரமாண வாக்குமூலத்தை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
 
கச்சத்தீவு, இராமநாதபுரம் சேதுபதி அரசருக்குச் சொந்தமானது. இந்தத் தீவை வணிகர்களான ஜனாப் முகமது காதர் மரக்காயருக்கும், முத்துசாமி பிள்ளைக்கும் அரசர் சேதுபதி ஐந்தாண்டுகளுக்குக் குத்தகைக்கு வழங்கியிருந்தார். இதற்கான ஆவணம், இராமநாதபுரம், துணை பதிவாளர் அலுவலக ஆவண எண். 510டி570, தேதி 2.7.1980. 1947இல் ஜமீன் ஒழிப்புச் சட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு சொந்தமானது. கச்சத் தீவு இந்தியாவிற்குச் சொந்தம் என்பதற்கு பல ஆவணங்கள் உள்ளன.
 
கச்சத்தீவுப் பிரச்சினையில் தமிழகத்தின் பக்கம் நீதியும் நேர்மையும் நிரம்ப இருப்பதால், நமது உரிமையை உச்ச நீதிமன்றம் நிலைநாட்டிடும் என்று நம்புவோம்!இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment