Saturday, September 28, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வாய்மொழி மூல அறிக்கையில் மேற்குலக நாடுகளின் எதிர்கால திட்டம் வெளியிடப்பட்டுள்ளது: குணதாச அமரசேகர

Saturday, September 28, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வாய்மொழி மூல அறிக்கையில் மேற்குலக நாடுகளின் எதிர்கால திட்டம் வெளியிடப்பட்டுள்ளது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
 
மேற்குலக நாடுகளின் இந்த திட்டத்திற்கு முகம் கொடுக்கும் போது நேரடியான வழிமுறையின் அடிப்படையில் முழு நாட்டு மக்களை தயார்ப்படுத்த வேண்டும்.
 
நவநீதம்பிள்ளையின் வாய்மொழி மூல அறிக்கையானது மேற்குலக பிரிவிவாத நிகழ்ச்சி நிரலை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமை மற்றும் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதே நவநீதம்பிள்ளையின் உண்மையான பங்களிப்பாகும்.
 
அவரது அறிக்கையில் மூன்று பிரதான விடயங்களை வலியுறுத்தியுள்ளார். முதலாவது, இலங்கை அரசு போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த கட்டமைப்பை ஏற்படுத்தவில்லை என்றால் சர்வதேச தலையீட்டில் அவ்வாறான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மறைமுக அச்சுறுத்தியுள்ளார்.
 
இலங்கை அதனை செய்யவில்லை என்றால் மட்டுமே அப்படியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தன்னை நியாயப்படுத்தியுள்ளார்.
 
அவரது எழுத்து மூலமான அறிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் சமர்பிக்கப்படும் போதுதான் சர்வதேச விசாரணை கட்டமைப்பு தேவை என்ற யோசனை மேற்குலக நாடுகளினால் முன்வைக்கப்பட வாய்ப்புள்ளது.
இரண்டாவது, வடக்கல் இராணுவத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை. இந்த கோரிக்கை பிரிவினைவாத வரைப்படத்தின் பிரதான மைல் கல்.
 
எதிர்காலத்தில் சர்வதேச தலையீட்டை ஏற்படுத்த தேவையான மோதலை உருவாக்க அவர்கள் இந்த கோரிக்கை பயன்படுத்துவார்கள்.
நவநீதம்பிள்ளையின் மூன்றாவது வலியுறுத்தல், இனவாத மோதல் என்ற முத்திரை குத்தப்படக் கூடிய மோதல்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் அவை பற்றி ஆய்வு செய்ய சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்பதாகும்.
 
இந்த யோசனையும் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் கிளை ஒன்றை இலங்கையில் ஸ்தாபிக்க வேண்டும் என்ற யோசனையும் போர் நடைபெற்ற காலத்தில் இருந்து முன்வைக்கப்பட்டு வரும் யோசனைகள்.
சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோர் கூறும் தமது போராட்டமான அகிம்சை வழி மக்கள் போராட்டம். இவ்விதமான சர்வதேச தலையீட்டுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை என குணதாச அமரசேகர தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment