Saturday, September 28, 2013

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றில் இன்று மதியம் இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் சிறுவனொருவன் காயம்!

Saturday, September 28, 2013
இலங்கை::வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றில் இன்று மதியம் இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் சிறுவனொருவன் காயமடைந்து வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மிருகங்களை வேட்டையாடுவதற்காக தயாரிக்கப்படும் உள்ளுர் வெடியொன்றை வீட்டில் இருந்து (வெங்காய வெடி) சிறுவன் விளையாடியபோது இவ்  வெடி விபத்து ஏற்பட்டதனால் திலக்சன் எனும் 3 வயது சிறுவன் கை விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையிலும் தலையில் காயமடைந்த நிலையிலும் வவனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் வவனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 


 

No comments:

Post a Comment