Monday, September 02, 2013
இலங்கை::வட மாகாணத்தில் 10,000 தமிழ் பொலிஸாரை புதிதாக இணைத்துக் கொள்வதற்கான கோரிக்கையை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி அவர்கள் முதற்கட்டமாக பொலிஸ் சேவைக்கு 5,000 தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத் துக்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளார்.விரைவில் வட மாகாணத்தில் முதற்கட்டமாக 5,000 தமிழ் பொலிஸாரு க்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. ஆர்வமுள்ள தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ள முடியும்.
எனவே அதனை வேலைவாய்ப்பாக மட்டும் கருதாமல் தமிழ் மொழி மூலமாக எமது மக்கள் தமது முறைப்பாடுகளை செய்வதற்கும், உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்கின்ற அசெளகரியங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கு இந்த வாய்ப்பை எமது இளைஞர், யுவதிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment