Monday, September 02, 2013
காத்மண்டு;;புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக நேபாளத்தின் மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் புஷ்ப கமல் தஹால் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் ஒரு தசாப்த காலமாக நீடித்த கிளர்ச்சிகளின் போது புலிகளுடன் தொடர்புகளை பேணியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நேபாள மாவோயிஸ்ட்கள், புலிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
2008ம் ஆண்டு நேபாளத்தின் பிரதமராக தஹால் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காத்மண்டு நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முதல் தடவையாக தமது கட்சி புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக பகிரங்கப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலிகள் இன விடுதலைக்காக போராடியதாகவும் அதன் அடிப்படையில் தொடர்புகளை நியாயப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் புலிகள், மவோயிஸ்ட்களின் உதவியைப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகள் இயக்கம் மிகவும் தைரியமான இயக்கம் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
அடக்குமுறைகளுக்கு எதிராக புலிகள் போராட்டம் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், புலிகளிடமிருந்து எவ்வாறான உதவி பெற்றுக் கொள்ளப்பட்டது என்பது பற்றிய துல்லியமான விபரங்களை வெளியிடவில்லை.
No comments:
Post a Comment