Monday, August 12, 2013

இந்திய எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு!

Monday, August 12, 2013
ஜம்மு::இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாக இந்திய பாதுகாப்புத் துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் புஞ்ச் மாவட்டம் திக்வார் கிராமத்தில் பாதுகாப்பு நிலைகள் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர், மிக பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவ பேச்சாளர் கூறினார்.
 
பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினரும் திருப்பி சுட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டை திங்கட்கிழமை காலை 6 மணி வரை நீடித்ததாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment