Monday, August 12, 2013

தமிழ் மக்களின் (புலி பினாமிகளின்) உரிமைக்கான மூன்றாம் கட்டப் போராட்டம் ஆரம்பம் சி.வி.விக்கினேஸவரன்!

Monday, August 12, 2013
இலங்கை::தமிழ் மக்களின் உரிமைக்கான மூன்றாவது கட்ட போராட்டம் தற்போதுதான் ஆரம்பிக்கவுள்ளது. ஆயுதப் போராட்டத்தால் எமது பிரச்சினைகள் உலகறியச் செய்யப்பட்டுள்ளமையினால் இந்த மூன்றாம் கட்டப் போராட்டம் மீண்டும் ஜனநாயக முறைப்படி ஆனால் சர்வதேச நாடுகளின் புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் தொடரப்போகின்றது என்று தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தச் சட்டத்தில் எதுவுமில்லை என்று நாங்கள் கூறுவதால் பயனேதும் இல்லை. பகிஷ்கரிப்பதால் தரம் கெட்டவர்கள் தயக்கமின்றி அதிகாரபீடத்தில் ஏறிக்கொள்ள அது வழிவகுக்கும். 13ஆவது திருத்தச் சட்டத்தை எமக்கு சாதகமாக நடைமுறைப்படுத்த முடியுமென்று சில சட்ட வல்லுனர்கள் கூறிவருகின்றனர். முதலில் எமக்குத் தேவைப்படுவது ஜனநாயக ஆதரவாகும். ஆயுததாரிகளுக்கு அது இருக்கவில்லை என்று கூறும் சர்வதேச நாடுகளுக்கு நாங்கள் மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் என்பதை பறைசாற்ற வேண்டும். வடக்குத் தேர்தலில் 36 ஆசனங்களில் 30 ஆசனங்களையாவது நாம் வெல்ல வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தத் தேர்தல் வெறுமனே வாக்குக் கேட்டு பெறும் ஒரு தேர்தலல்ல. தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் தேர்தல் இது. வட இலங்கை தமிழ் மக்களின் குரல் சர்வதேச அரங்கில் ஒலிக்க வைப்பதற்கான அதி முக்கிய தேர்தல் இது. இந்தத் தேர்தலில் அதிசிறப்புடன் வெற்றி பெறவேண்டுமானால் இத்தனை காலமும் இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்று கூறி வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த அனைவரையும் வாக்களிக்க அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் விக்கினேஸ்வரன் வலியுறுத்தினார்.

13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது. இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு 'இலங்கை இந்திய ஒப்பந்தமும் 13ஆவது திருத்தச் சட்டமும் மாகாண சபைகளும்" எனும் தலைப்பில் உரையாற்றும்போதே முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment