Monday, August 12, 2013
இலங்கை::பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெலுவ, மாத்துகெட ஜயந்தராமய விகாரையில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி புத்த சிலையை திரைநீக்கம் செய்துவைத்தார்.

இதன்போது செயலாளர், அப்பிரதேச மக்களினால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் சமய கிரிகைகளுக்கு சங்கைக்குறிய பெல்லாவ ஜினரத்ன தேரர் தலைமை தாங்கினார்.
அங்கு உரையாற்றிய செயலாளர், யுத்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மக்களின் கவனம் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த புராதன பிரதேசங்கள் மீது திரும்பியுள்ளது. எனவே அரசானது அப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளன எனக்குறிப்பிட்டார்.
அப்பிரதேசத்தைத் சேர்ந்த கோப்ரல் பியசிரி 2006 ஆம் ஆண்டு நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்தமையை நினைவு கூர்ந்ததுடன் நன்றியையும் தெரிவித்தார். அவருக்கு 2008 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதாப்பிரிவால் வீடொன்று வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் சங்கைக்குறிய தலங்கல்ல அஸ்ஸாகி தேரர் உட்பட மஹா சங்கத்தினர், தேசிய வளங்கள் அமைச்சர் கௌரவ பியசேன கமகே பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment