Monday, August 12, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் - புலிகளும் சிங்கள மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் - புலிகளும் சிங்கள மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
வெலிவேரிய தாக்குதல் சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரும் அரசு முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு மன்னிப்புக் கோரவில்லை என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
புலிகளிடமிருந்து மக்களை மீட்பதற்காகவே வன்னியில் இராணுவம்
மனிதாபிமான போரை முன்னெடுத்தது.
எனவே, முள்ளிவாய்க்கால் போருக்கும் வெலிவேரியா துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் சம்பவத்துக்குமிடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
இதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது.
முக்கியமாக பிக்குகள் படுகொலை, தலதா மாளிகை மீதான தாக்குதல் ஆகியன தொடர்பில் புலிகளும் கூட்டமைப்பினருமே சிங்கள மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அரசியல் தீர்வை கேட்கவில்லை. அவர்கள் எதிர்பார்த்த அபிவிருத்திகளை அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது.
எனவே, தேர்தலில் தமிழ் மக்கள் இம்முறை அரசாங்கத்தையே ஆதரிப்பார்கள்.
மாறாக தமிழர்கள் வடக்குத் தேர்தலில் கூட்டமைப்பை ஆதரிப்பார்களானால், அது அவர்கள் தமது கழுத்தை தாமே அறுத்துக் கொள்ளும் செயலுக்கு ஈடானது என்றார்.
No comments:
Post a Comment