Monday, August 12, 2013
இலங்கை::பிரித்தானிய புலனாய்வுப் பிரிவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். எதிர்வரும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் இளவரசர் சார்ள்ஸ் பங்கேற்க உள்ளார். இளவரசரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராயும் நோக்கில் பிரித்தானிய புலனாய்வுப் பிரிவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

இளவரசர் சார்ள்ஸ் இலங்கையில் தங்கியிருக்கும் போது விஜயம் செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படும் இடங்களின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்துள்ளனர். பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத்தின் விசேட பிரதிநிதியாக இளவரசர் சார்ள்ஸ் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தூரப் பயணங்களை வரையறுக்கும் நோக்கில் பிரித்தானிய மஹாராணி இலங்கை விஜயத்தை தவிர்த்துக் கொண்டதாக பக்கிங்ஹாம் மாளிகை வட்டாரத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இவ்வாறு முன்கூட்டியே இலங்கைக்கு விஜயம் செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment