Monday, August 12, 2013

இந்திய மீனவர்களை துரித கதியில் விடுதலை செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது!

Monday, August 12, 2013
இலங்கை::இந்திய மீனவர்களை துரித கதியில் விடுதலை செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்து மீறி பிரவேசித்த இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
 
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை துரித கதியில் விடுதலை செய்வதற்கான சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கைள வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை துரித கதியில் விடுதலை செய்யுமாறு கோரும் உரமை இந்தியாவிற்கு காணப்படுகின்றது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
 
எனினும், உள்நாட்டில் பின்பற்றப்பட வேண்டிய சில சட்ட விதிகளின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என்பதனை இந்தியா புரிந்து கொள்ள வேண்டுமேன தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment