Monday, August 12, 2013

எதிர்வரும் வடக்கு, வட மேற்கு மற்றும் மத்திய மாகாண சபை தபால் மூல வாக்களிப்பு!

Monday, August 12, 2013
இலங்கை::எதிர்வரும் வடக்கு, வட மேற்கு மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்ளின் போது தபால் மூலம் வாக்களிக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் விண்ணப்பித்துள்
ளனர்
 
தேர்தல்கள் திணைக்களம் இதுவரை கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தபால் மூலம் வாக்களிக்க 12 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தவிர குருநாகல் மாவட்டத்திற்காக 45 ஆயிரத்து 964 விண்ணப்பங்களும், கண்டி மாவட்டத்திற்காக 30 ஆயிரம் விண்ணப்பங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தபால் மூலம் வாக்களிப்பவர்கள் குறித்த இறுதி தீர்மானம் எதிர்வரும் 15ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தபால் மூலமான வாக்களிப்புக்கள் எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

No comments:

Post a Comment