Thursday, August 29, 2013

வருமானவரி மேற்பார்வையாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் கையளிப்பு!

Thursday, August 29, 2013
இலங்கை::திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களில் கடையாற்ற 22 வருமானவரி மேற்பார்வையாளர்களுக்கான நியமனக்கடிதங்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் அவரது அலுவலகத்தில் வைத்து  புதன் கிழமை (28-08-2013) வழங்கிவைத்தார்.
 
இதன் போது அவர் உரையாற்றுவதையும் வருமானவரி மேற்பார்வையாளர்கள் அமர்ந்திருப்பதையும் இதன் போது முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸிஸ், கிழக்கு மாகாண உள்ளூராட்ச்சி ஆணையாளர் எம். உதைய குமார் மற்றும் ஏசிய பவுன்டேசன் திட்ட உத்தியோகத்தர் ஐ.எம். வலீத்தையும் படங்களில் காணலாம்.

No comments:

Post a Comment