Thursday, August 29, 2013
இலங்கை::கடந்த மூன்று ஆண்டுகளில் புகலிடம் கோரி அவுஸ்திரேலியா நோக்கிப் பயணம் செய்ய முயற்சித்த 4145 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் கடலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் செல்ல முயற்சிப்போரின் எண்ணிக்கை பாரியளவில் குறைந்துள்ளது.

இலங்கையில் உழைப்பதனை விடவும் பத்து மடங்கு ஊதியம் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் பலர் அவுஸ்திரேலியா நோக்கி ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதாக கடற்படைத் தளபதி ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்குள் சென்றுவிட்டால் குடும்ப உறுப்பினர்களை அழைத்துக்கொள்ள முடியும் என நம்புகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளின் மூலம் தொடர்ந்தும் புலிகள் நிதி திரட்டி வருவதாக கடற்படைத் தளபதி கொலம்பகே தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment