Thursday, August 29, 2013
இலங்கை::நடைபெறவிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இலங்கை அரசாங்கத்தை குற்றவாளியாக நிரூபிக்கும் செயற்பாட்டிலேயே நவநீதம்பிள்ளை மும்முரமாக ஈடுபட்டுள்ளார். எனவே, நவநீதம்பிள்ளையின் அறிக்கை அரசாங்கத்திற்கு மட்டும் பிரச்சினையல்ல. முழு இலங்கைக்கும் பிரச்சினையை ஏற்படுத்துமென்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதரவு இலங்கைக்கு கிடைப்பதனை நவநீதம்பிள்ளையின் மூலமாக தடுத்து புலிகளின் செயற்பாட்டினை மீண்டும் நாட்டிற்குள் கொண்டு வரவே ஐ.நா.முயல்கின்றது எனவும் அவ்வியக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. சுமத்தியுள்ளது.
செளசிரிபாயவில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கருத்துத் தெரிவிக்கையில்,
நவநீதம் பிள்ளையின் அறிக்கை சுயாதீனமானதாக அமையும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை. அவர் பக்கம் சார்பாகவே செயற்படுகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கருத்துக்களை கேட்டால் அரசாங்கம் குற்றம் செய்ததாகத்தான் எண்ணத் தோன்றும். எனவே, நவநீதம்பிள்ளையின் வருகையில் எமக்கு எவ்வித விருப்பும் இல்லை. அவர் எமது நாட்டின் அபிவிருத்தி சமாதானம் மற்றும் ஒற்றுமையினை சீர்குலைக்கவே இங்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
மனித உரிமைகள் என்பது பொதுநலமாக செயற்படுத்த வேண்டியதொரு விடயம். அதை சுயநலமாக செயற்படுத்துவது எமது நாட்டிற்கே பாதிப்பினை ஏற்படுத்தும்.
நவநீதம்பிள்ளை அமெரிக்காவினதும் புலிகள் இயக்கத்தினதும் கையாள். அவர் இலங்கையில் பக்கசார்பின்றி செயற்படுவார் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை எனவும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment