Thursday, August 29, 2013

பொதுநலவாய நர்டுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்கக் கூடாது : கே.எஸ்.இளங்கோவன்!

Thursday, August 29, 2013
சென்னை::பொதுநலவாய நர்டுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்கக் கூடாது என காங்கிரஸ் உறுப்பினர் கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
 
இந்தத் தருணத்தில் அமர்வுகளை புறக்கணிப்பு பொருத்தமற்றது எனவும் மாறாக இலங்கையுடன் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இலங்கையும் இந்தியாவும் கூட்டாக இணைந்து கரையோர ரோந்துப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் எல்லைப் பகுதிகளை வலுப்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்க வேண்டுமென கோருவதில் நியாயமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
 

No comments:

Post a Comment