Saturday, August 31, 2013

வடபகுதியில் படையினரால் மக்கள் காணாமல் போயியுள்ளதாக குற்றம் சுமத்தப்படுமாயின் காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் நபர்களின் பெயர் விபரங்களை முன்வைக்குமாறு: பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கோரிக்கை!

Saturday, August 31, 2013
இலங்கை::வடபகுதியில் படையினரால் அதிகளவிலான மக்கள் காணாமல் போயியுள்ளதாக குற்றம் சுமத்தப்படுமாயின், காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் நபர்களின் பெயர் விபரங்களை முன்வைக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நேற்று சந்தித்த போது, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அத்துடன் சில அமைப்புகள் கூறுவது போல் வடக்கில் இறுதிக்கட்ட போரின் போது 40 ஆயிரம் பேர் காணாமல போயுள்ளதாக தெரிவிக்கப்படுவதை நிராகரிப்பதாகவும் கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அரசாங்கம், யூனிசெப், செஞ்சிலுவைச் சங்கம் போன்ற பல அமைப்புகள் நடத்திய எந்த விசாரணைகளிலும் இந்த தகவல் தெரியவரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 

No comments:

Post a Comment