Saturday, August 31, 2013
இலங்கை::இறுதி யுத்தம் தொடர்பில், இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவிருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற அவரது ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏழுநாட்கள் விஜயமாக இலங்கை வந்திருந்த நவநீதம் பிள்ளை இன்று இலங்கையில் இருந்து புறப்படுகிறார்.
இதன்நிமித்தம் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் காரியாலயத்தில் அவரது ஊடக சந்திப்பு நடைபெற்றது.
இதில் உரையாற்றிய நவநீதம் பிள்ளை, இலங்கையின் இறுதி யுத்தம் சம்பந்தமாக உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்தார்.
அத்துடன் புலிகள் மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பு என்றும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கடந்த சில தினங்களை போல, இன்றைய தினமும் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் காரியாலயத்திற்கு முன்னர்ள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
நவநீதம் பிள்ளை இலங்கை விஜயம் தொடர்பில் முன்வைக்கின்ற அறிக்கை பக்கச்சார்பின்றி இருக்க வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது..

No comments:
Post a Comment