Thursday, August 29, 2013

கிழக்கை வடக்குடன் இணைத்து நம்மை ஆட்டிப்படைக்க சதி மேற்கொள்ளப்படுகிறது: அதாவுல்லா!

Thursday, August 29, 2013
இலங்கை::கிழக்கு மாகாணத்தை மீண்டும் வடக்கு மாகாணத்துடன் இணைத்து வெளிநாடுகளின் தேவைக்கேற்ப நம்மை ஆட்டிப் படைப்பதற்கு சதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.
அதேவேளை, எமது சிறியதோரு நாட்டுக்கு மாகாண சபை முறைமை தேவை தானா என்ற நாம் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை உள்ளூர் ஆளுமை நிறுவனத்தின் ஏற்பாட்டில் தமிழ் மொழி மூலம் உள்ளூராட்சி டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்த ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

உள்ளூர் ஆளுமை நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஐ.ஏ.ஹமீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் பேசுகையில்,
எமது நாடு சிறிய நாடாக இருந்தாலும் அழகிய இயற்கை வளங்கள் கூடுதலாகக் காணப்படும் நாடாக இருக்கின்றது.அனைத்துலக நாடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எமது நாடு பிரதானமாக மூன்று இனங்களும் இரண்டு மொழிகளும் காணப்படுகின்றன. மற்றைய நாடுகளைப் பார்த்தால் நூற்றுக்கு மேற்பட்ட மொழிகளும் அதைவிட அதிகமான மதங்களும் காணப்படுகின்றன.

அவ்வாறு நூற்றுக்கு மேற்பட்ட மொழிகளும் மதங்களும் காணப்படுகின்ற நாடுகளிலுள்ள பிரச்சினைகளைவிட நமது நாட்டில் இனங்களுக்கிடையில் அதிகம் பிரச்சினை இருக்கின்றது.

இவற்றையெல்லாம் சில அரசியல் சக்திகள் திட்டமிட்டு உருவாக்குவதோடு, அதனூடாக இனங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்தி சமாதானம் நிலவுகின்ற எமது நாட்டை குழப்ப முயற்சிக்கின்றனர்.

நமது சிறிய நாட்டிற்குள் நாம் ஏன் இன ரீதியாக பிளவு படுகின்றோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். சிங்களம்,தமிழ்,முஸ்லிம் என்று ஏன் ஒருவருக்கொருவர் முரண்படுகின்றோம். நாம் இலங்கையர்கள் என்ற உணர்வு இருக்க வேண்டும். அவரவரது மத உரிமைகளோடு வாழ வேண்டும். அதற்காக நாம் இனரீதியாக பிளவுபடக்கூடாது. மூவினங்களும் நிம்மதியாக வாழ வேண்டும்.

No comments:

Post a Comment