Thursday, August 29, 2013

யாழ் மாவட்டத்தில் 13 ஆயிரத்து நூறு இராணுவத்தினரே கடமையில்: யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க!

Thursday, August 29, 2013
இலங்கை::யாழ் மாவட்டத்தில் 13 ஆயிரத்து நூறு இராணுவத்தினரே கடமையில் உள்ளரென யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
 
யாழ்ப்பாணத்தில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் கடமையில் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.
 
மகிந்த ஹத்துருசிங்க மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்தில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இவ்வாறான உண்மைக்குப் புறம்பானதும், கற்பனையானதுமான இராணுவ எண்ணிக்கைத் தகவல்களை சிலர் வெளியிட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இது ஒரு ஆதாரமற்ற தகவல் எனவும் குறிப்பிட்டார்.
 
மேலும் நாட்டின் பாதுகாப்பையும், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கும் தேவையான இராணுவத்தினரையே பாதுபாப்பு அமைச்சு யாழ் குடாவில் பணிக்கு அமர்த்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கும் பேச்சு சுதந்திரத்திற்கும் இராணுவம் அச்சுறுத்தலாக இருப்பதாக சிலர் சொல்வதை மறுத்த அவர்,  அவ்வாறு இராணுவத்தினர் கட்டுப்பாட்டை விதித்தால் மக்கள் எவ்வாறு தமது ஜனநாயக போராட்டத்தையும் கவனயீர்ப்பு போராட்டத்தினையும் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினையும் அரசுக்கு எதிராகவும் ஏனையயோருக்கு எதிராகவும் செய்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.
 
யாழ் குடாவில் மக்கள் அவர்களின் நாளாந்த கடமைகளை சுதந்திரமாக செய்து வருகின்றனர் என யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment