Thursday, August 29, 2013

சாவ­கச்­சே­ரியில் இடம்­பெற்ற துப்­பாக்கிச்சூட்டுச் சம்­பவம் தொடர்­பாக சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் யாழ். மாவட்ட அமைப்­பாளர் அங்­க­ஜனின் தந்தை கைது!

Thursday, August 29, 2013
இலங்கை::சாவ­கச்­சே­ரியில் இடம்­பெற்ற துப்­பாக்கிச்சூட்டுச் சம்­பவம் தொடர்­பாக சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் யாழ். மாவட்ட அமைப்­பாளர் அங்­க­ஜனின் தந்­தை­யான இரா­ம­நா­தனை பொலிஸார் நேற்று மாலை 5.15 மணி­ய­ளவில் கைது செய்­துள்­ளனர் என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கரு­ணா­ரட்ண தெரி­வித்தார்.

சாவ­கச்­சேரிப் பகு­தியில் நேற்று முன்­தினம் இரவு 7.30 மணி­ய­ளவில் அங்­கஜன் இரா­ம­நாதன் குழு­வி­னரும் அக்­கட்­சியைச் சேர்ந்த சர்­வ­ானந்­தாவின் குழு­வி­ன­ருக்கும் இடையில் இடம்­பெற்ற வாக்­கு­வா­தத்­தின்­போது துப்­பாக்கிப் பிர­யோ­கத்­தினால் சர்­வா­னந்­தாவின் வாக­னச்­சா­ர­தியும் அங்­க­ஜனின் பாது­காப்புப் பிரிவுப் பொலி­ஸ் உத்தியோ கத்தரும் கா­ய­ம­டைந்­துள்­ளனர்.

இத்­தாக்­கு­தலின் பின்­ன­ணியில் சர்­வா­னந்தா பதிவு செய்த முறைப்­பாட்­டிற்கு அமைய இரா­ம­நா­தனை பொலிஸார் நேற்று மாலை 5.15 மணி­ய­ளவில் கைது செய்­துள்­ளனர்.
 
 

No comments:

Post a Comment