Friday, August 30, 2013
இலங்கை::மனோ கணேசனின் கட்சியான ஜனநாயக தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான முரளி இரகுநாதன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
நேற்றைய தினம் அவர் பாராளுமன்ற சபை முதல்வரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவைச் சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதுடன் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்துக்குப் பூரண ஆதரவினை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
புதய தொழிலாளர் கட்சியின் தலைவரான முரளி இரகுநாதன் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைவதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.
செய் நன்றி மறவாத தலைவரைக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஆதரவு வழங்குவது எனது கடமையாகும். அதேவேளை எமது கட்சியின் தலைவர் மனோ கணேசனால் எனக்கு இழைக்கப் பட்ட அநீதி மற்றும் செயற்பாடுகளை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதும் ஒரு காரணமாகும்.
எதிர்வரும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் நானும் எனது கட்சியினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குப் பூரண ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சர் நிமல் சிறிபாலவுடனான இச் சந்திப்பில் நுவரெலிய மாவட்டத்தில் மாகாண சபைத் தேர்தலுக்குப் பொறுப்பாகவுள்ள போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கமவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment