Friday, August 30, 2013
சென்னை::திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலைய கண்காணிப்பில், ஆளில்லாத குட்டி விமானம்
ஈடுபடுத்தப்பட உள்ளது. இலங்கையிலிருந்து கடல் வழியாக, பாக்., தீவிரவாதிகள், தென்
தமிழகத்திற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தலாம் என்ற, மத்திய உளவுத் துறையின்
எச்சரிக்கையை அடுத்து, கூடங்குளம் அணுமின் நிலையத்தில், ஐந்தடுக்கு பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.
வான்வெளி தாக்குதலை தடுக்க, விமானப் படையும் தயார் நிலையில்
வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை அண்ணா பல்கலை., மாணவர்கள் உருவாக்கியுள்ள,
நவீன கேமராக்களுடன் கூடிய, ஆளில்லாத குட்டி விமானம் மூலம், அணுமின் நிலையம்
கண்காணிக்கப்பட உள்ளது. அதற்கான செயல்முறை விளக்கம், கூடங்குளத்தில் நடந்தது.
ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்படும் இந்த விமானம், அணுமின் நிலையத்தைச் சுற்றி,
12 கி.மீ., தூரம் வரை பறந்து சென்று கண்காணித்து, புகைப்படம் மற்றும் வீடியோ
காட்சிகளை கட்டுப்பாட்டு அறைக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கும். உயரதிகாரிகளின்
அனுமதி கிடைத்தவுடன், இந்த விமானம் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும்.
No comments:
Post a Comment