Thursday, July 04, 2013
இலங்கை::இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் வை.கே.சிங்ஹாவை நேற்று முன்தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கை::இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் வை.கே.சிங்ஹாவை நேற்று முன்தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவருவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அதனை தடுத்து நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியத் தூதுவருக்கு எடுத்துகூறியுள்ளார்.
13ஆவது திருத்தச்சட்ட விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.
இதேபோல் இன்று வியாழக்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ புதுடில்லிக்கு விஜயம் செய்கிறார். அமைச்சரது விஜயத்தை முன்னிட்டு இந்திய தூதுவர் வை.கே. சிங்ஹாவும் இன்று புதுடில்லி பயணமாகின்றார். இந்த நிலையிலேயே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இந்தியத் தூதுவரை சந்தித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கான இந்தியத் தூதுவராக பதவியேற்றுள்ள வை.கே.சிங்ஹா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நியமனக்கடிதத்தினை கையளித்ததுடன் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் இலங்கை அரசாங்கம் 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முனைவது தொடர்பில் இந்தியா தனது அதிருப்தியினை தெரிவிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment