Thursday, July 4, 2013

மாளிகாவத்தை பிரபல பாதாள உலகக் குழு தலைவரான மாமாஷிமி துப்பாக்கிச் சூட்டில் பலி!

Thursday, July 04, 2013
இலங்கை::மாளிகாவத்தை பிரபல பாதாள உலகக் குழு தலைவரான மாமாஷிமி துப்பாக்கிச் சூட்டில் பலியானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.

கொழும்பு -7 பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் இருந்து இன்று வியாழக்கிழமை
காலை குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மனித படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரென்றும் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment