Thursday, July 4, 2013

லண்டன் கிரிக்கட் மைதானத்தில் புலிக்கொடி ஏந்தி அத்துமீறி பிரவேசித்து இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு தடையை ஏற்படுத்திய இலங்கையருக்கு எதிராக கொழும்பு நீதிம்றில் திறந்த பிடிவிராந்து!

Thursday, July 04, 2013
இலங்கை::லண்டன்கிரிக்கட் மைதானத்தில் அத்துமீறி பிரவேசித்து இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு தடையை ஏற்படுத்திய இலங்கை
யருக்கு எதிராக நேற்று கொழும்பு நீதிம்றில் திறந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
லண்டனின் கார்டிப் மைதானத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டியின் அரையிறுதியாட்டத்தில் இலங்கையர் ஒருவர் புலிக்கொடி ஏந்தி, மைதானத்திற்குள் அத்து மீறி பிரவேசித்திருந்தார்.
 
அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்களைத் தாங்கிய பதாகை ஒன்றையும், புலிக்கொடி ஒன்றையும் ஏந்தி குறித்த நபர் மைதானத்திற்குள் பிரவேசித்தார்.
லோகேஸ்வரன் மணிமாறன் என்ற புலி ஆதரவாளருக்கு எதிராக இவ்வாறு திறந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
கொழும்பு மாவட்ட பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
 
லோகேஸ்வரன் மணிமாறன் எனப்படும் மொஹமட் ராஜீ என்ற பிரித்தானிய பிரஜை ஏ.ரீ.எம். மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் சில தனியார் வங்கிகளில் மோசடியான முறையில் பத்து போலிக் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி பாரியளவு பணம் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
ஹட்டன் நசனல் வங்கி மற்றும் கொமர்சல் வங்கி ஆகியவற்றிலும் சுமார் மூன்று மில்லியன் ரூபா பணம் இவ்வாறு மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய இரண்டு சந்தேக நபர்களும் லோகேஸ்வரன் மணிமாறன் பற்றிய தகவல்களை வழங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment