Tuesday, July 02, 2013
இலங்கை::பொலிஸார், பிரதேச அரசியல்வாதிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாவது அதிகரித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதனூடாக மக்கள் பொலிஸார் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்கப்படுவதாக ஆணைக்குழுவின் செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பங்களில் இவ்வாறான தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளமை பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
பொலிஸார் மீதான நம்பிக்கை குறைவடையும் பட்சத்தில் எதிர்காலத்தில் மக்கள் சட்டத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கும் பாதிப்பு ஏற்படக் கூடுமென சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

No comments:
Post a Comment