Tuesday, July 02, 2013
இலங்கை::தாயகத்தை பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றிய இலங்கை இராணுவத்தினர், தற்போது, நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்கி வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
போர் வெற்றியில் பாரிய பங்களிப்பை செய்த முக்கிய படைப்பிரிவிவான கஜபா படைப்பிரிவு இந்த அபிவிருத்தி பணியில் வழங்கி வரும் பங்களிப்பு பாராட்டப்பட வேண்டியது எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை இராணுவத்தினர் நலன்புரி நடவடிக்கைகள் மாத்திரமின்றி, நாட்டின் அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை இராணுவம் நாட்டின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக நாடு முழுவதும் பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
அனுராதபுரம் சாலியபுர பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள விடுமுறை விடுதி மற்றும் நலன்புரி விற்பனை நிலையம் என்பவற்றை நேற்று (01) திறந்து வைத்து உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் இதனை கூறியுள்ளார்.
No comments:
Post a Comment