Tuesday, July 02, 2013
இலங்கை::மாகாண சபை முறைமை இரத்து செய்யப்படுமானால் அரசாங்கத்திலிருந்து விலக நேரிடும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
மாகாண சபையின் அதிகாரத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமானால் அந்த அரசாங்கத்தில் என்னால் இருக்க முடியாது. ஆனாலும் அது அவ்வாறு எழுதப்பட வேண்டும். மாகாண சபையின் அதிகாரம் நீக்கப்பட்டால் மாத்திரமே விலகுவேன். திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் அல்ல. இந்த அரசாங்கத்துடன் ஏதேனும் பிரச்சினை இருப்பின் அது ஜனநாயகம் தொடர்பிலேயே இருக்கும். இந்த அரசாங்கத்தின் ஜனநாயக செயற்பாடுகள் போதாமல் இருக்கின்றது..

மாகாணசபை அதிகாரங்கள் ஒருபோதும் மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை மீறும் வகையில் அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அச்சம் கொள்ளும் நபர்கள் மாகாணசபை முறைமை பற்றி அறியாதகவர்களாகவே இருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபை முறைமை ரத்து செய்யுமாறு ஜே.என்.பி. யின் தலைவர் விமல் வீரவன்ச கோரவில்லை எனவும், அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டுமென்றே கோரி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment