Tuesday, July 02, 2013
இலங்கை::புலிகள் அமைப்பினால், கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அழிவை ஏற்படுத்துவதற்காக கொண்டு வந்துள்ள இதுவைரை கண்டுப்பிடிக்கப்படாத சுமார் ஒரு தொன் எடை கொண்டு குண்டு அவிசாவளை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக புலிகளின் புலனாய்வு பிரிவின் தலைவர் ஒருவர் ஊடாக தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டம்மானின் ஆலோசனைக்கு அமைய இந்த குண்டு மறைத்து வைக்கப்பட்டதாக வவுனியாவை சேர்ந்த ராஜேந்திர குமார் என்ற நபர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த சந்தேக நபரை மூன்று நாட்களுக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு நீதவான் நிரோஷா பெர்ணான்டே சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
19 துப்பாக்கிகள், 3 ஆயிரத்து 500 தோட்டக்கள், 03 எல்.எம்.ஜி துப்பாக்கிகள், ஒரு கோடி ரூபா பணம், 80 லட்சம் ரூபா பெறுமதியான சொக்லட்டுகள் உள்ளிட்டவை ஒரு தொன் எடைக் கொண்ட குண்டுடன் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
புலிகள் செயற்பட்ட காலத்தில், அந்த அமைப்பின் புலனாய்வு பிரிவின் உறுப்பினரான இந்த சந்தேக நபர், துப்பாக்கி மற்றும் குண்டை கொண்டு வந்து மறைத்து வைத்தாகவும் அவை மறைத்து வைக்கப்பட்;டுள்ள இடத்தை காண்பிக்க சந்தேக நபர் தானாவே முன்வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
No comments:
Post a Comment