Friday, July 05, 2013
இலங்கை::நாடு இரண்டாக பிளவுப்படும் என சிங்கள மக்கள் நினைப்பதற்கு காரணம், புலம்பெயர் தமிழர்களும், தமிழகத்தில் உள்ள சில அரசியல்வாதிகளுமே எனவும் இதனால் இலங்கை அரசாங்கத்திற்கும், சிங்கள மக்களுக்கும் நாடு இரண்டாக பிளவுப்பட்டு விடும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் புலிகளின்

முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
போர் முடிந்துள்ள போதிலும், புலம்பெயர் தமிழர்கள் புலிகளை பயன்படுத்தி சம்பாதித்த பணத்தை கொண்டு வடக்கு மாகாண மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக தமது தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்த்து கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளமை, சிங்கள மக்கள் மத்தியிலும் அரசாங்கத்திற்கும் நாடு இரண்டாக பிளவுப்படும் ஆபத்து இருக்கின்றது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வட பகுதி மக்களே பெருமளவில் பாதிக்கப்பட போகின்றனர் எனவும் தயா மாஸ்டர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment