Friday, July 05, 2013
இலங்கை::திருகோணமலை மாவட்டத்திலுள்ள 65 பள்ளிவாயல்களின் அபிவிருத்திக்கு கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் நிதி ஒதுக்கீடுசெய்துள்ளார்.
இலங்கை::திருகோணமலை மாவட்டத்திலுள்ள 65 பள்ளிவாயல்களின் அபிவிருத்திக்கு கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் நிதி ஒதுக்கீடுசெய்துள்ளார்.
இம்முறை கிண்ணியாவில் நடைபெற்ற தேசிய மீலாத்விழாவையொட்டி பெறப்பட்ட பிரதேச அபிவிருத்தி நிதியான 13 மில்லியன் ரூபா இவ்வாறு பள்ளிவாயல்களின் அபிவிருத்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் டீ.எம்.ஜெயரட்னவை சந்தித்த முதலமைச்சர், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக 10 மில்லியன் ரூபா நிதியினை வழங்குமாறு வேண்டுகோள்விடுத்தார். மேலதிகமாக கோரப்பட்ட நிதியில் முடியுமான தொகையை தாம் நிச்சயம் வழங்குவதாக பிரதமர் உறுதியளித்தார்.
No comments:
Post a Comment