Friday, July 05, 2013
இலங்கை::மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக எஸ்.எஸ்.பி.மெவன் சில்வா இலங்கை பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனினால் செவ்வாய்கிழமை முதல் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை::மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக எஸ்.எஸ்.பி.மெவன் சில்வா இலங்கை பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனினால் செவ்வாய்கிழமை முதல் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி எஸ்.எஸ்.பி.அஜந்த சமரகோன் குருநாகல் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக இட மாற்றம் பெற்று சென்றதை அடுத்தே அவரின் வெற்றிடத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்த எஸ்.பி.மெவன் சில்வா இலங்கை பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனினால் பதவியுயர்வு பெற்று மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டடுள்ளார்.
புதிய மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையேற்றுள்ள எஸ்.எஸ்.பி.மெவன் சில்வா தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக நேற்று செவ்வாய்கிழமை சுப நேரத்தில் மட்டக்களப்பில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் வைத்து கடமையேற்றார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டதிதிலுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள்,மத குரு மார்கள் என பலரும் பிரச்னமாயிருந்தனர்.
தற்போது புதிய மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையேற்றுள்ள எஸ்.எஸ்.பி.மெவன் சில்வா கடந்த ஆறு மாதங்களாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment