Friday, July 05, 2013
இலங்கை::2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் மாணவர்கள் சிலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப் படை உறுப்பினர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் அடங்குவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 12 விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment