Monday, July 1, 2013

பாதுகாப்பு தொடருந்து பாதையில் இடம்பெறும் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை!

Monday, July 01, 2013
இலங்கை::பாதுகாப்பு கடவையில் இடம்பெறும் விபத்துக்களை தடுப்பதற்கு அரசாங்கம் அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலிறுத்தி மனித உரிமைகள் ஆணைக்குழு தயாரித்த அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
இதனிடையே, கடந்த தினங்களில் பாதுகாப்பற்ற தொடரூந்து கடவைகளில் பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.அவிசாவளை - அளுத்அம்பலம் பிரதேசத்தில் நேற்று மாலை கெப் வாகனம் ஒன்று தொடரூந்துடன் மோதியுள்ளது.
 
இந்த விபத்தில் வாகனத்தை செலுத்திய பெண் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, மீறிகம பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்று தொடரூந்துடன் மோதியதில் இருவர் பலியானதுடன், அளுத்மக பிரதேசத்தில் சிற்றூர்தி ஒன்று தொடருந்தில் மோதியதில் 6 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment