Monday, July 1, 2013

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாலாக செயற்பட்டு வருகின்றது: மொஹமட் முஸம்மில்!

Monday, July 01, 2013
இலங்கை::ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாலாக செயற்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமரர் அஷ்ரப்பின் கொள்கைக்கு புறம்பாக செயற்படுகின்றது.
 தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற ஆர்வம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடையாது.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய இனப்பிரச்சினையை பயன்படுத்தியே அரசியலில் ஈடுபடுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கே கூடுதல் நேரத்தை செலவிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்..
இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தமையானது, இப் பிரச்சினையை தொடர்ந்தும் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக​வே என தேசிய சுதந்திர முன்ணனியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸாமில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  அறிவித்ததைத் தொடர்ந்து, கொழும்பில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதை விட, காலத்தை விரயமாக்கி அரசாங்கத்திற்கு சோதனைகளை ஏற்படுத்துவதே தேவையாக உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்...
 
தமிழீழத்திற்கான இரண்டாவது போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து செயற்படுகின்றனர். ஆகவே யார் வராவிட்டாலும் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் அரசாங்கம் உடனடியாக தீர்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
 
தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நிலைப்பாடு கூட்டமைப்பிற்கு கிடையாது. தேசிய பிரச்சினையை சுயநல அரசியலுக்காகவே பயன்படுத்துகின்றனர். மறுபுறம் போலிக் குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன் வைத்து நாட்டிற்கு எதிராகவும் செயற்படுகின்றனர். விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுத்த கூட்டமைப்பு ஒரு போதும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க ஒத்துழைக்காது என்றும் அம் முன்னணி குறிப்பிட்டுள்ளது.
 
பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய முன்னணியின் பேச்சாளர் முசம்மில் கூறுகையில்,
 
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் கூட்டமைப்பு கலந்து கொள்வதில்லை. இறுதியாக அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவையும் புறக்கணித்துள்ளது. இவர்களுக்கு ஆதரவாக ஐ.தே.க., ஜே.வி.பி. மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்டோரும் செயற்படுகின்றனர்.
 
ஆகவே இவர்கள் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளாவிடினும் அரசாங்கம் தீர்வுகளை ஏற்படுத்த பின்னிற்க கூடாது. தற்போது தெரிவுக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களைக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும். சுயநல அரசியல் வாதிகளுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. தமிழ் மக்களின் உரிமைகளைப் பற்றி பேசும் கூட்டமைப்பு வன்னியில் மக்கள் துன்பங்களை அனுபவிக்கையில் ஒரு போத்தல் தண்ணீரைக் கூட கொடுக்கவில்லை.
 
அதனையும் இராணுவமே செய்தது. வடக்கில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை அங்கு குடியமர்த்துகையில் போலிப் பிரசாரங்களை செய்து நெருக்கடிகளைக் கொடுக்கின்றனர். எனவே இனியும் காலத்தைக் கடத்தாது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழீழத்திற்கான இரண்டாவது போராட்டத்தை தோற்கடிக்க வேண்டும் எனக் கூறினார்.

No comments:

Post a Comment