Monday, July 01, 2013
இலங்கை::13வது அரசியல் அமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தங்கள் குறித்தும், அது தொடர்பாக இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் பற்றியும் இந்தியாவுக்கு தெளிவுப்படுத்துவதே தனது இந்திய விஜயத்தின் பிரதான நோக்கம் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த எண்ணியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநிதியாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ வரும் 04 ஆம் திகதி இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
தனது இந்திய விஜயத்தின் போது, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்திஷ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இதனை தவிர பொருளாதார உறவுகள் குறித்தும் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் பசில் கூறியுள்ளார்.
அதேவேளை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் எதிர்வரும் 07 ஆம் திகதி இலங்கை செல்ல உள்ளார்.
No comments:
Post a Comment