Monday, July 01, 2013
இலங்கை::போர் நடைபெற்ற காலத்தில் பல்வேறு காரணங்களால் வடக்கு, கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் வசிப்பவர்களில், தம்மை வாக்காளர்களாக பதிவுசெய்து கொள்ளாதவர்கள், தம்மை பதிவுசெய்து கொள்வதற்கான காலஅவகாசம் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள், 2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய தவறியவர்கள், தம்மை பதிவுசெய்வதற்காக விண்ணபிக்க வழங்கப்பட்ட காலஅவகாசம் கடந்த மாதம் 28 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
விடுக்கப்பட்ட கோரிக்கைகளை அடுத்து, காலஅவகாசம் ஜூலை 02 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. அந்;த காலஅவகாசம் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment