Monday, July 01, 2013
இலங்கை::மாகாண சபைகளின் அதிகாரங்களில் திருத்தங்கள் ஏற்படுத்துவது தொடர்பான 05 விடயங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது எனவும் அதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பதில் தான் அரசாங்கத்தின் எதிர்காலம் தீர்மானி
க்கப்படும் எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தெளிவாக தனது நிலைப்பாட்டை நாட்டுக்கு கூறவேண்டும். நாம் இந்தியாவுக்கு சென்றிருந்த போது, இந்திய அமைச்சர்களை சந்தித்து எமது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினோம். இந்திய தூதுவரை சந்தித்து, தெளிவுப்படுத்தினோம். ஏன் உங்கள் அரசாங்கம், எங்கள் பிரதமரிடம் தனது நிலைப்பாட்டை கூறவில்லை என இந்திய அதிகாரிகள் எம்மிடம் கேள்வி எழுப்பினர்.
இது தவறானது, அரசாங்கம் தனது நிலைப்பாட்டை நேரடியாக கூறவில்லை. இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் இந்தியாவிற்குரியவர்கள் என இந்திய நினைத்து கொண்டுள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே தமிழர்கள் இலங்கையில் இருப்பதாக கூறுகின்றனர். விஜயனுக்கு பின்னரே சிங்களவர்கள் வந்தாக நாம் கூறுகிறோம். சிங்களவர்கள் வங்கதேசத்தில் இருந்து வந்தாக கூறுகின்றனர். இதனை ஏற்றுக்கொள்வது, அல்லது நிராகரிப்பது என்பது வேறு விடயம். எனினும் சிங்களவர்கள், இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதை இந்தியா ஏற்கவில்லை. சிங்களவர்களாகிய எமது அடையாளம் இந்தியாவில் இருந்தே கட்டியெழுப்படுகிறது. இந்திய தனது பொருட்களை தமிழர்களுக்கு மாத்திரம் விற்பனை செய்யவில்லை.
இந்தியாவில் இருந்து அரசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்கிறோம். ஆனால் மற்றுமொரு பருப்பை சாப்பிட்டோம். இந்தியாவின் மைசூர் பருப்பு உண்பதை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் வேறு பருப்புகளை திண்ண நாங்கள் விரும்பவில்லை. காரணம் இலங்கை சுயாதீனமான நாடு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையின் அரசியல் அமைப்பில் மாற்றங்களை செய்வதற்கான அழுத்தங்களை கொடுக்க முடியாது. இலங்கை சிறிய நாடாக இருக்கலாம் ஆனால் இந்தியா, இலங்கையை தனது ஆணையின் கீழ் வைத்து கொள்ள உரிமையில்லை.
தமிழ் மக்களுக்கு பொருத்தமானது என்பதால் நாங்கள் மாகாண சபைகளை எதிர்க்கவில்லை. மாகாண சபைகள் தொடர்பில் இனவாதத்தை ஏற்படுத்தியது ஜாதிக ஹெல உறுமய அல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இனவாதத்தை ஏற்படுத்தியது. மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டமைப்பின் மாநாட்டில் தமது ஈழம் தேவை என தெரிவித்தது. வடக்கு மாகாண சபை ஏற்படுத்தப்பட்டால், நாட்டில் சமூக - அரசியல் நெருக்கடி ஏற்படும் எனவும் அத்துரலியே ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment