Thursday, July 04, 2013
இலங்கை::இலங்கை இந்திய உடன்படிக்கை சட்ட ரீதியானதல்ல என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கம் வாக்குறுதிகளை மீறிச் செயற்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த உடன்படிக்கை சட்ட ரீதியானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இந்திய உடன்படிக்கையும், 13ம் திருத்தச் சட்டமும் சட்ட ரீதியானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய இலங்கை உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதனைப் போன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை இந்தியா களையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட 72 மணித்தியாலங்களுக்குள் புலிகளின் ஆயுதங்களை களைவதாக இந்தியா வாக்குறுதி அளித்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இந்த உடன்படிக்கை சட்ட ரீதியானதல்ல என்பதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகளைக் கொண்டே ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க முடியும் என்ற பிழையான கருதுகோளே பிரச்சினைகளுக்கு காரணம் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment