Thursday, July 4, 2013

இலங்கையின் உள்நாட்டுப் போர் பற்றிய ஆவணப்படத்தை அனுமதி இன்றி பொதுமக்களுக்குத் திரையிட்டுக் காட்டிய மூவர் மலேசியாவில் கைது!

Thursday, July 04, 2013
கோலாலும்பூர்::இலங்கையின் உள்நாட்டுப் போர் பற்றிய  ஆவணப்படத்தை அனுமதி இன்றி பொதுமக்களுக்குத் திரையிட்டுக் காட்டிய மூவர் மலேசியாவில் கைது!
 
இலங்கையின் உள்நாட்டுப் போர் பற்றிய  ஆவணப்படத்தை அனுமதி இன்றி பொதுமக்களுக்குத் திரையிட்டுக் காட்டியதற்காக மூவர் மலேசியாவில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.

‘No Fire Zone: In the Killing Fields of Sri Lanka’ என்ற அந்த ஆவணப்படத்தின் திரையீட்டுக்கு இரண்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் - கோலாலும்பூர், சிலாங்கூர் சீன அசெம்ளி மண்டபத்தின் சிவில் உரிமை குழுவும் கோமாஸும் ஏற்பாடு செய்திருந்தன.

படத்தைத் திரையிட்ட 10 நிமிடங்களில் உள்துறை மற்றும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் 30 பேர் சென்று படத்தையும் படத்தைத் திரையிட உதவிய கணினியையும் பறிமுதல் செய்ய முற்பட்டனர்.

ஏற்பாட்டாளர்கள் பேச்சு நடத்தியதை அடுத்து படத்தைத் திரையிட அனுமதித்த அவர்கள், பின்னர் ஏற்பாட்டாளர்களில் மூவரை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணை
க்கு அழைத்துச் சென்றனர்.

No comments:

Post a Comment